Publish Date: Fri, 28 Jan 2022 (17:15 IST)
Updated Date: Fri, 28 Jan 2022 (17:19 IST)
தேவையான பொருட்கள்:
இறால் - 250 கிராம்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
சாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நசுக்கிய பூண்டு - 5 பல்
நசுக்கிய இஞ்சி - 1 துண்டு
வெங்காயத்தாள் - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
செஸ்வான் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து, அதனுடன் மிளகுத்தூள், உப்பு, கார்ன்ஃப்ளார், முட்டை, மைதா சேர்த்து கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு தவாவில் எண்ணெய் சேர்த்து இறாலை இரண்டு பக்கம் நன்கு பொரித்து எடுத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள், உப்பு, மிளகுத்தூள், செஸ்வான் சாஸ், சர்க்கரை சேர்த்து வதக்கி, கார்ன் ஃப்ளாரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து அதில் சேர்க்கவும்.
சிறிது கெட்டியானதும் வறுத்த இறாலை சேர்த்து நன்கு கலந்து, கடைசியாக வெங்காயத்தாள் சேர்க்கவும். இப்போது சுவையான செஸ்வான் பிரான் தயார்.
Sasikala
Publish Date: Fri, 28 Jan 2022 (17:15 IST)
Updated Date: Fri, 28 Jan 2022 (17:19 IST)