ஹைதராபாத்: `சுப்பிரமணியபுரம்' இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தயாரிப்பில் வெளியான `பசங்க' படத்தை இயக்கிய பாண்டிராஜூக்கு சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு கிடைத்தது.
குழந்தைகளை மையமாகக் கொண்ட படம் `பசங்க'. இப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற 16ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில், ஆசியப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்டது.
இதையடுத்து இப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, விருதினைப் பெற்றார்.
இந்த விருதை நடிகை ஜூஹி சாவ்லா பாண்டிராஜிடம் வழங்கினார்.