பாராளுமன்ற நிலைக்குழு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகம் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.
மதுரை கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகம் உள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகம் மீது சரமாரியாக கல்வீசி தாக்கியது.
இதில், ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது. வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் கொடி கம்பமும் வெட்டி சாய்க்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அவரது வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.