Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை‌த் தமிழர் பிரச்சனை: கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌களுட‌ன் கருணாநிதி ஆலோசனை

Advertiesment
இலங்கை‌த் தமிழர் பிரச்சனை: கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌களுட‌ன் கருணாநிதி ஆலோசனை
இலங்கை‌த் தமிழர் பிரச்சனை தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் முலமைச்சர் கருணாநிதி நேற்‌றிரவு ‌‌திடீரென செ‌ன்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆலோசனை நடத்தினார்.

WD
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இலங்கை‌த் தமிழர் பிரச்சனை பற்றிய ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், கே.பொன்முடி, எ.வ.வேலு,

இந்திய ூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, எல்.கணேசன், தேசிய லீக் மாநில பொதுச்செயலர் திருப்பூர் அல்தாப், தி.மு.க. அமைப்புச்செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கே.செல்லமுத்து, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் தயாநிதி மாறன், கவிஞர் கனிமொழி, மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil