திருச்சியில் சிறிலங்கா அரசிற்குச் சொந்தமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகம் மீது மர்மக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் வில்லியம்ஸ் சாலையில் உள்ள பிரபல உணவு விடுதி வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறிலங்கா அரசிற்குச் சொந்தமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலக வளாகத்திற்குள் இன்று மாலை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென்று நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
சிறிலங்க இராணுவத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் கண்ணாடிக் கதவுகளை அடித்து நொறுக்கியதுடன், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பரப் பலகைகளையும் கிழித்து எறிந்தனர்.
இதைப் பார்த்து அலுவலக ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். கண்ணாடிகள் நொறுங்கும் சத்தம் கேட்டு அருகிலுள்ள கடைகளின் ஊழியர்கள் ஓடி வந்தனர். இதைப் பார்த்தவுடன் தாக்குதல் நடத்திய கும்பல் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.