இலங்கைத் தமிழர்கள் காக்கப்பட வேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் சேலம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகின்றனர்.
6 வது நாளாக இன்றும் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து மாணவர்களை பாராட்டினர்.
6 நாட்கள் ஆனதால் மாணவர்கள் சோர்வாக காணப்பட்டனர்.