சென்னை : முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள்.
முன்னதாக அண்ணா பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் காலை 7 மணிக்கு அமைதி பேரணி நடைபெறுகிறது. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா நினைவிடம் செல்கிறது. பேரணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.