Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசனூர் பகுதியில் குடிசையை இழந்தவர்களுக்கு முழு நிவாரண உதவி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌‌மி

Advertiesment
ஆசனூர் பகுதியில் குடிசையை இழந்தவர்களுக்கு முழு நிவாரண உதவி
ஈரோடு , திங்கள், 2 பிப்ரவரி 2009 (13:59 IST)
ஆசனூர் பகுதியில் தீயினால் குடிசையை இழந்தவர்களுக்கு வருவாய் துறை சார்பாக முழு நிவாரணம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது ஆசனூர் மலைப்பகுதி. இங்குள்ள ஒங்கல்வாடியில் பழ‌ங்குடி இன‌த்தை சே‌ர்‌‌ந்த லட்சுமி, மாரே, சரோஜா குடிசை ‌வீ‌ட்டி‌ல் வசித்து வந்தன‌ர்.

webdunia photoWD
கடந்த மாதம் இவர்களது குடிசை ‌வீடுக‌ள் தீபிடித்து முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவல் தெரிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. மகேஸ்வரன் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி சத்தியமங்கலம் தாசில்தார் சிவசுந்தரம் பாதிக்கப்பட்ட 3 பேரு‌க்கு‌ம் நிவாரண உதவிதொகையாக ரூ.இரண்டாயிரம், ஒரு ஜோடி வே‌ட்டி- சேலை, பத்து கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணை ஆகியவை வழங்கினார்.

மேலும் அவர்களின் குழந்தைகளின் பாடபுத்தகங்களும் எரிந்து நாசமானதால் பு‌‌திய பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil