அரசு மகளிர் பள்ளியில் தியான வகுப்பு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தியான வகுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோபி சாலையில் உள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு படிப்பு திறன் அதிகரிக்க தியான வகுப்பு பயிற்சி கற்றுதரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓதியப்பன் தலைமை தாங்கினார்.
பள்ளி மாணவிகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்துதல் மற்றும் காலை, இரவு நேரத்தில் தியானம் செய்யும் முறை தேர்வுக்கு முன் தங்களை எப்படி தியானம் மூலம் தயார் செய்யவேண்டும் என்பது குறித்த தியான விளக்கங்களை திண்டுக்கல் பிரம்ம குமாரிகள் பொறியாளர் கோவிந்தராஜ் மற்றும் அனந்த கிருஷ்ணா ஆகியோர் விளக்கி பயிற்சி அளித்தனர்.