கடலூர் : கடலூரில் உள்ள அரசு பெரியார் கலைக்கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு கையில் வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசை கண்டித்து கல்லூரி வளாகத்தில் நுழைத்த தினகரன் என்பவர் கையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டினார்.
இதை பார்த்து அங்கு உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் வைத்திருந்தது மல்டிமீட்டர் கருவி என்பது தெரியவந்தது.
இதனிடையே, இலங்கை தமிழர்களை காக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்கள், தேவனாம்பட்டிணம் மீனவ பெண்கள் அமைப்பு கேட்டுக் கொண்டதின் பேரில் உண்ணாவிரதத்தை இன்று விலக்கிக் கொண்டனர்.
உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்றும், வேறுவிதமாக போராட்டதை நடத்துமாறும் இந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்களது போராட்டத்திற்கு தங்கள் ஆதரவு உண்டும் என்றும் தெரிவித்தனர்.