இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்யும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் சாம்பல் கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும் என்றும், முத்துக்குமாருக்கு மணிமண்டம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
நிலக்கோட்டை அருகே இலங்கை பிரச்சனைக்காக தீக்குளித்த ரவியின் தியாகத்தை காவல்துறையினர் கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார்.