தஞ்சாவூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க ராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதலைக் கண்டித்து தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச் செயலர் பி.மணியரசன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கொளத்தூர் மணி ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக விமானப் படைத் தளம் நோக்கி அவர்கள் ஊர்வலமாக வந்தனர்.