இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், உடனடியாக போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் சேலம் மத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
சேலம் முன்னாள் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு பந்தல் போடப்பட்டு, தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் தொடங்கினார்கள். இதில் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் பற்றி மாணவர்கள் கூறுகையில், ''இலங்கையில் போரை நிறுத்த மத்திய - மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை எங்களின் உண்ணாவிரத போராட்டம் தொடரும்'' என்றனர்.
2வது நாளாக இன்றும் அவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.