Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌‌ங்கை‌‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை க‌ண்டி‌த்து நாளை மவுன விரத போராட்டம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க‌‌ம் அ‌றி‌வி‌ப்பு

Advertiesment
இல‌‌ங்கை‌‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலை க‌ண்டி‌த்து நாளை மவுன விரத போராட்டம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க‌‌ம் அ‌றி‌வி‌ப்பு
சென்னை , வியாழன், 29 ஜனவரி 2009 (10:19 IST)
இலங்கையில் தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதை தெரியப்படுத்துகின்ற வகையில் நாளை பல்லாயிரக்கணக்கானோ‌ர் கையில் கறுப்பு கொடி ஏந்தி, அமைதியாக எங்களுடைய மவுன விரதத்தை நடத்துகிறோம் எ‌ன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க‌த்‌தி‌ன் ஒருங்கிணைப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் தெ‌ரி‌வி‌த்‌து‌ள்ளா‌ர்.

webdunia photoWD
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்பினரும், மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ரராமதாஸ், ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ம.தி.மு.க. துணை பொதுசெயலர் மல்லை சி.சத்யா, வழ‌க்க‌றிஞ‌ரகே.ராதாகிருஷ்ணன், இல‌ங்கநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரசிவாஜிலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலங்கை‌தமிழர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், நிரந்தர அமைதி ஏற்படவும் தமிழகத்தில் என்னென்ன போராட்டங்களை நடத்துவது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் இ‌ந்கூ‌ட்ட‌மநடந்தது.

இதை‌ததொட‌ர்‌ந்தஇந்திய கம்யூனிஸ்டு க‌‌ட்‌சி‌யி‌னமாநில செயலர் தா.பாண்டியன், 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளை வெளியிடுவதற்காக அந்த அமைப்பு இருக்கும். அந்த அமைப்பில் பங்கேற்பதற்காக மற்றவர்களையும் அழைக்க வேண்டும். இப்போது இங்கே வந்திருப்பவர்கள், "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் இப்போதிருந்து எங்களுடைய நடவடிக்கைகளை தொடங்குகிறோம்.

அதற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்க, பழ.நெடுமாறனை வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்'' என்றா‌ர்.

பி‌ன்ன‌ர் ச‌ெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய பழ.நெடுமாறன், ''ஜனவரி 30ஆ‌ம் தேதி (நாளை) காந்தியின் மறைந்த நாளில் நம்முடைய கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்னால், இங்கே இருக்கின்ற 5 பேரும், மற்றும் இங்கே வர முடியாமல் இருக்க கூடிய மற்ற தலைவர்கள், அமைப்புகள் அனைவரையும் அழைத்து, இலங்கையில் எங்களுடைய சகோதர தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற அந்த வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதை தெரியப்படுத்துகின்ற வகையில் நாங்களும், பல்லாயிரக்கணக்கான தோழர்களும் கையில் கறுப்பு கொடி ஏந்தி, அமைதியாக அங்கே மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் எங்களுடைய மவுன விரதத்தை நடத்துகிறோம்.

31ஆ‌ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் ஒரு மண்டபத்தில், ஒரு விரிவான கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் வகுக்க இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து சமுதாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், மகளிர் சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ள், பொ‌றியாள‌ர்க‌ள் சங்கம், அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், திரைப்பட நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குனர் சங்கம், பத்திரிகையாளர் சங்கம், விவசாய சங்கங்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து ஒரு விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை அந்த கூட்டத்தில் நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.

தொடர்ந்து எங்களுடைய இந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களை திரட்டி நாங்கள் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அது பற்றி எல்லோரிடமும் பேசிவிட்டு அறிவிக்கப்படும்'' எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil