முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2ஆம் தேதி வரையில் 7 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும், இந்த நாட்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். 7 நாட்களும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்று தமிழக அரசு தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டு உள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.