இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
6 நாட்களாக உணவு சாப்பிடாததால், உண்ணாவிரதம் இருக்கும் 14 மாணவர்களும் மிகவும் சோர்வாக படுத்திருந்தனர். அவர்களை மருத்துவ குழுவினர், உண்ணாவிரத பந்தலில் பரிசோதித்து வருகிறார்கள்.
இதனிடையே மயங்கி விழுந்த மாணவர்கள் ஜம்புகுமார், ஆறுமுக நயினார் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.