Newsworld News Tnnews 0901 24 1090124006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக மீனவர்க‌ள் 22 பே‌ர் இல‌ங்கை ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு

Advertiesment
தமிழக மீனவர்கள் இலங்கை சிறை கடற்படை
ராமேஸ்வரம் , சனி, 24 ஜனவரி 2009 (10:35 IST)
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் ‌பிடி‌த்து‌ச் செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்படு‌த்‌த‌ப்ப‌ட்டு சிறை‌யி‌ல் அடை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டணத்தில் இருந்து 4 படகுகளில் 18 மீனவர்களும், ஜெகதாபட்டிணத்தில் இருந்து ஒரு படகில் 4 மீனவர்களும் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil