தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தும் பொழுது 5 ஆண்டுகளுக்கு மேல் டாஸ்மாக்கில் பணியாற்றிய பணியாளர்களுக்கு தமிழக அரசு துறைகளில் மாற்று நிரந்தர பணியிடங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.எஸ்.சௌந்தரபாண்டியன், பொதுச்செயலர் க.ராமன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு 8 மணிநேர வேலை, வார விடுமுறை போன்ற கோரிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.