இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையை கண்டித்து பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
சட்டப்பேரவை முடியும் ஜனவரி 30ஆம் தேதி வரை பா.ம.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருவார்கள் என்று அக்கட்சித் தலைவர் கோ.க.மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழினம் அழிந்து வருவதை கண்டித்தும், உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தியும் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.