சட்ட விரோத செயல் என்பதால், 'கள்' இறக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரிஅனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதநீர் இறக்கும் பருவகாலம் தொடங்குவதால் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவும், நிதி ஆதாரங்களை தொடர்புடைய அமைப்புகளுக்கு உடனே தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மதுவை படிப்படியாக இல்லாமல் ஆக்குவோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார் என்று தெரிவித்த குமரி அனந்தன், இந்த நிலையில், தடையை மீறி சிலர் கள் இறக்கும் போராட்டம் நடத்துவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், கள் இறக்கும் போராட்டம் நடத்துவது சட்ட விரோத செயல் என்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.