Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள் இறக்க அனுமதி மறுப்பது கேலிக்கூத்தானது: இல.கணேசன்

Advertiesment
கள் இறக்க அனுமதி மறுப்பது கேலிக்கூத்தானது: இல.கணேசன்
அய‌ல்நாட்டு மதுவகைகளை விற்க அனுமதித்து விட்டு 'கள்' இறக்க அனுமதி மறுப்பது கேலிக்கூத்தானது'' என்று த‌மிழக பா.ஜ.க தலைவ‌ர் இல.கணேசன் கூறியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருதல் வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போது இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அரசின் அணுகுமுறை வெறும் கண் துடைப்பாகவும் இரட்டை நிலைப்பாடாகவும் உள்ளது.

மது விற்பனை கூடங்கள் ஒரு மணி நேரம் முன்பாகவே மூடப்பட்டு விடும். எனவே அதற்கு முன்பாகவே வாங்கிக் கொள்ளுங்கள் என்பது வெறும் கண்துடைப்பு. அரசின் டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் குறித்து கணக்கெடுத்தால் அதிகம்பேர் விவசாயிகளாகத்தான் இருப்பார்கள். ஏற்கனவே விவசாயம் நசிந்து வரும் நிலையில் இந்த மதுப்பழக்கத்தால் அவர்கள் கிடைக்கும் வருமானத்தையும் இழந்து வருகிறார்கள்.

கேரள, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ஒரு தென்னை அல்லது பனை மரத்தில் கிடைக்கும் வருமானத்தை விட தமிழகத்து விவசாயிக்கு கிடைக்கும் வருமானம் 5 மடங்கு குறைவு. காரணம் அந்த மாநிலங்களில் 'கள்' இறக்க அனுமதி வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்திலும் விவசாயிகள் தங்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டால் தங்களுக்கும் வருமானம் கூடும் என கருதுகிறார்கள்.

தமிழக அரசு ஒருபுறம் அய‌ல்நாட்டு மதுவகைகளை அனுமதித்து விட்டு இதற்கு அனுமதி மறுக்கும் இரட்டை நிலைப்பாடு ஒரு கேலிக்கூத்து என விவசாயிகள் குற்றம் சாட்டுவது நியாயமான குற்றச்சா‌ற்று என்றே கருதுகிறேன் எ‌ன இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil