தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலராக மு.க.அழகிரி நியமனம்
சென்னை , செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:26 IST)
தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலராக மு.க.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொது செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்த மு.க.அழகிரிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மு.க.அழகிரிக்கு தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.