திருவள்ளுவர் தினத்தையொட்டி வரும் 15ஆம் தேதி சென்னையில் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மாவட்டத்தில் உள்ள எல்லா மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த 'பார்'கள், 'கிளப்'புகளை சார்ந்த உரிமம் பெற்ற பர்மிட் ரூம்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினம் மது விற்பனை செய்ய கூடாது. தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.