லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு கோழிப்பண்ணையாளர் சங்கம் ஆதரவு அளித்திருந்தது. இதனால் நாமக்கல்லில் முட்டை லாரிகள் இயக்கப்படவில்லை.
இதனால், 4 கோடி முட்டைகள் பண்ணைகளில் தேக்கமடைந்தன. சத்துணவு திட்டத்துக்கு கூட முட்டைகளை அனுப்ப முடியவில்லை.
இந்நிலையில், கிடங்குகளில் தேங்கிய முட்டைகள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல் தேக்கமடைந்த முட்டைகள் அயல் மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்க தலைவர் நல்லதம்பி கூறுகையில், ''முட்டை லாரிகள் இன்று (நேற்று) முதல் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. முட்டை லாரிகளை பாதுகாப்புடன் இயக்க நிர்வாகம் தேவையான ஏற்பாடு செய்துள்ளது'' என்றார்.