Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிரதமரு‌க்கு கரு‌ப்பு‌க்கொடி கா‌ட்ட முய‌ன்ற பழ.நெடுமாற‌ன் உ‌ள்பட 675 பே‌ர் கைது

Advertiesment
‌பிரதமரு‌க்கு கரு‌ப்பு‌க்கொடி கா‌ட்ட முய‌ன்ற பழ.நெடுமாற‌ன் உ‌ள்பட 675 பே‌ர் கைது
செ‌ன்னை , வியாழன், 8 ஜனவரி 2009 (13:53 IST)
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எ‌ன்று‌ம், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று‌ம் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு பொருட்படுத்தாததக‌ண்டி‌த்து, செ‌ன்னவ‌ந்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்ககரு‌ப்பு‌க்கொடி கா‌ட்முய‌ன்தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக‌த்‌தின‌ர் உ‌ள்பட 675 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
webdunia photoWD

ஈழததமிழர்களை படுகொலை செய்ய சிங்கள ராணுவ வெறியர்களுக்கு துணை நின்ற பிரதமர் மன்மோகன்சிங்கு‌க்கஎ‌திராகரு‌ப்பு‌க்கொடி கா‌ட்டுவோ‌மஎ‌ன்றபழ.நெடுமாறன் ஏ‌ற்கனவே அ‌றி‌‌‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். இத‌ற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அனுமத‌ி மறு‌த்தாலு‌ம் தடையை ‌மீ‌றி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு கரு‌ப்பு‌க் கொடி கா‌‌ட்டுவோ‌ம் எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர். இந்தப் போராட்டத்திற்கு பெரியார் தி.க. அழைப்பு விடுத்திருந்தது.

அத‌ன்படி இ‌ன்று காலை 8 மணிக்கு செ‌ன்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் துவங்கியது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், தியாகு, பொதுச் செயலர்கள் கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கை‌யி‌ல் கரு‌ப்பு‌க்கொ‌டியுட‌ன் மத்திய அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

அய‌ல்நா‌ட்டுவா‌ழ் இ‌ந்‌திய‌ர் மாநா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று காலை ஆளுந‌ர் மா‌ளிகை‌யி‌ல் இரு‌ந்து செ‌ன்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்திற்குச் சென்றார்.

அதே நேரத்தில் செ‌ன்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசிற்கும், பிரதமரு‌க்கும் எ‌‌திராக ஆவேச‌த்துட‌ன் முழக்கங்கள் எழு‌ப்‌பின‌ர்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நடவடி‌க்கை எடு‌க்காம‌ல் மவுனமாக இரு‌க்கு‌ம் ‌பிரத‌ம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கே சிங்களவர்கள் உனக்கு பங்காளிகள், தமிழர்கள் எதிரிகளா என்றும், நீங்கள் தமிழருக்கு பிரதமரா அல்லது சிங்களத்திற்குப் பிரதமரா என்றும் முழக்கங்கள் எழுப்பியது மட்டுமின்றி, அவ்வாறு எழுதப்பட்ட அட்டைகளையும் பிடித்துக்கொண்டிருந்தனர்.

45 நிமிட நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அவ‌ர்களை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து அ‌ங்‌கிரு‌ந்து வாகன‌த்‌தி‌ல் கொ‌ண்டு செ‌ன்றன‌ர். சைதாப்பேட்டை தர்மராசா கோயில் தெருவில் உள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் அவர்களை கொண்டு சென்று அடைத்து வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 675 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்தா‌ல் அ‌ந்த பகு‌தி‌யி‌ல் போ‌க்குவர‌த்து சிறிது நேரம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil