Newsworld News Tnnews 0901 07 1090107018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
கிணறு மாணவன் ஈரோடு
ஈரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு வில்லரசம்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் லாரி ஓட்டுனராக உள்ளார். இவருடைய மகன் திவாகர் (8) அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வ‌ந்தா‌ர். நேற்று பள்ளிக்கு சென்ற திவாகர், ‌வீடு ‌திரு‌ம்ப‌வி‌ல்லை.

இதனா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர் பல இட‌ங்க‌ளி‌ல் தேடியும் திவாகர் கிடைக்கவில்லை. பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றின் பக்கத்தில் திவாகர் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிவித்தனர். உடனே அருகில் இருந்த கிணற்றில் சந்தேகப்பட்டு பா‌ர்‌த்தன‌ர். அ‌ப்போது ‌கிண‌ற்‌றி‌ல் ‌திவாக‌ர் ‌பிணமாக ‌‌கிட‌ந்தா‌ர்.

இது ப‌ற்‌‌றி தகவ‌ல் அ‌றி‌ந்து ‌விரை‌ந்து வ‌ந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் ‌பிணமாக ‌கிட‌ந்த திவாக‌ர் உடலை மீட்டன‌ர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளி மாணவன் கிணற்றில் இறந்த ‌கிட‌ந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil