தடையை மீறி பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம்: பழ.நெடுமாறன்
ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள ராணுவ வெறியர்களுக்கு துணை நின்ற பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
வரும் 8ஆம் தேதி அன்று காலை 8 மணிக்கு சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கட்சி வேறுபாடுஇன்றி தமிழர்கள், அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டாலும் தடையை மீறி நாம் கறுப்புக்கொடி காட்டுவோம் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.