Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொ‌ங்கலையொ‌ட்டி செ‌ன்‌ட்ர‌‌ல் - நாக‌ர்கோ‌வி‌லு‌க்கு ‌சிற‌ப்‌பு ர‌யி‌ல்

Advertiesment
பொ‌ங்கலையொ‌ட்டி செ‌ன்‌ட்ர‌‌ல் - நாக‌ர்கோ‌வி‌லு‌க்கு ‌சிற‌ப்‌பு ர‌யி‌ல்
, சனி, 3 ஜனவரி 2009 (18:42 IST)
பொ‌ங்க‌‌ல் ப‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு செ‌ன்னை செ‌‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலை‌ய‌த்த‌ி‌ல் இரு‌ந்து நாக‌ர்கோ‌விலு‌க்கு வரு‌ம் 7, 9, 13 ஆ‌‌கிய தேதிகளில் ‌சிற‌ப்பு ர‌யி‌ல்க‌ள் இய‌க்க‌ப்பட உ‌ள்ளதாகவு‌ம், இத‌‌ற்கான மு‌ன்ப‌திவு நாளை (ஞா‌‌‌யி‌ற்று‌க்‌கிழமை) காலை தொட‌ங்கு‌கிறது எ‌ன்று‌ம் தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.‌

இது தொட‌ர்பாக தெற்கு ரயில்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்தி‌க்குறிப்பில், "சென்னை சென்ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து நாகர்கோவிலுக்கு ஜனவ‌ரி 7,9,13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இ‌ந்த ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (எண் 0613) சென்ட்ரலில் இரு‌ந்தஇரவு 7.40 மணிக்கு புற‌ப்ப‌ட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நாகர்கோவில் செ‌ன்று சேரும்.

மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (எ‌ண் 0614) ஜனவ‌ரி 8, 10, 14 ஆகிய தே‌திக‌ளி‌ல் மாலை 4.30 மணிக்கு நாகர்கோவிலில் இரு‌ந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வ‌ந்து சேரு‌ம்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை,சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆ‌கிய ர‌யி‌ல் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் போது கூடுதலாக பெரம்பூர் ர‌யி‌ல் நிலையத்தில் நிற்கும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜனவ‌ரி 4) முதல் தொடங்குகிறது" எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil