புதுக்கோட்டை : ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் தாச்சன்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அனைவரும் கந்தார்வகோட்டை, தஞ்சாவூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் வந்திருந்தன.