Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ.‌தி.மு.க.வு‌க்கு ஆதரவாக நரே‌ஷ்கு‌ப்தா செ‌ய‌ல்படுவதாக தலைமை தே‌‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் தி.மு.க. புகார்

Advertiesment
அ.‌தி.மு.க.வு‌க்கு ஆதரவாக நரே‌ஷ்கு‌ப்தா செ‌ய‌ல்படுவதாக தலைமை தே‌‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் தி.மு.க. புகார்
, வெள்ளி, 2 ஜனவரி 2009 (13:48 IST)
திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.ி.ு.க.வுக்கு ஆதரவாக த‌மிழதலைமதே‌ர்த‌லஅ‌திகா‌ரி நரேஷ் குப்தா செயல்படுவதாக தி.ு.க சார்பில் டெ‌ல்‌லி‌யி‌லதலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் நே‌ற்று கொடு‌‌த்தா‌ர். அ‌ந்த புகார் மனுவி‌‌கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ி.ு.க.வினர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் அவர்களுக்கு சாதகமான முடிவு இருக்காது என்பதற்காக தேர்தலை தள்ளிவைக்க திட்டமிட்டுத்தான் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் அ.ி.ு.க.வினர் ஈடுபடுகின்றனர்.

வாக்காளர்களுக்கு அ.ி.ு.க.வினர் பணம் கொடுத்து வந்ததை தி.ு.க.வினர் தடுத்தனர். இதனால், தி.ு.க.வினர் மீதும், காவ‌‌ல்துறை‌ மற்றும் பொதுமக்கள் மீதும் அ.ி.ு.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபோன்ற பிரச்சனையை உருவாக்கி, வன்முறையில் ஈடுபட்டு, தேர்தலை தள்ளிவைக்கும் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே இதுபோன்ற வன்முறைகளில் அ.ி.ு.க.வினர் ஈடுபட்டு வருவதும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முற்பட்டு வருவதும் தேர்தலை தள்ளி வைக்கும் ஒரு நோக்கத்தில்தான். திட்டமிட்டே அ.ி.ு.க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் தருவது, தி.ு.க.வினர், காவ‌‌‌ல்துறமற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இதுவரை அ.ி.ு.க.வினர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.வி.சித்தன், ஏ.கிருஷ்ணசாமி, இ.ஜி.சுகவனம் ஆகியோர் அ.ி.ு.க.வினரின் சட்ட விரோத நடவடிக்கை குறித்து புகார் செய்வதற்காக நரேஷ் குப்தாவை கடந்த 30ஆம் தேதி சந்திக்கச் சென்றனர்.

அப்போது, அவர் பொறுப்பான பதிலை தரவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், 'உங்கள் தலைவரிடம் சென்று சொல்லுங்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு உயர் அதிகாரி இதுபோன்ற செயலில் ஈடுபடுவது மிகுந்த வேதனையைத் தந்துள்ளது. இதை தலைமைத் தேர்தல் ஆணைய‌த்துக்கு தெரிவிப்பது எனது கடமையாகும். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணைய‌மவிசாரிக்க வேண்டும். நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளகொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று பொறுப்பற்ற முறையில் நரேஷ் குப்தா பேசியிருப்பது, அவர் தி.ு.க.வுக்கு எதிராக செயல்படுவதைக் காட்டுகிறது.

திருமங்கலம் தொகுதியில் அ.ி.ு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வரும் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவர் பிரசாரத்துக்கு செல்லும்போது அதிக எண்ணிக்கையிலான கார்கள் அவருடன் செல்லும். அப்போதஅடியாட்களும் செல்வார்கள். பெரும்தொகை வாக்காளர்களுக்கு தரப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, வன்முறையில் ஈடுபட்டு தி.ு.க.வினர் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது, வாகனங்களை அடித்து நொறுக்கியது உள்ளிட்ட செயல்களில் அ.ி.ு.க.வினர் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

மேலும், அ.ி.ு.க வேட்பாளரை தி.ு.க.வினர் கடத்தத் திட்டமிட்டிருப்பதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை ஜெயலலிதா கூறியிருப்பது வேண்டுமென்றே கூறப்பட்ட குற்றசா‌ற்றா‌கும். சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுதான் அவரது பேச்சின் நோக்கமாகும்.

ி.ு.க தலைவர் கருணாநிதி 31ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தி.ு.க தொண்டர்களை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வைத்துள்ளது. அவர் வெளியிட்ட வேண்டுகோள் அறிக்கையும் தந்துள்ளோம். இடைத் தேர்தலில் ஜனநாயக மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் வெளியிட்ட வேண்டுகோள் மிகவும் மகத்தானது. அ.ி.ு.க.வினர் தூண்டுதல் பிரசாரத்தின் மீது தேர்தல் ஆணைய‌மஉரிய நடவடிக்கை எடுக்கும் என்பதற்காகத்தான் தி.ு.க.வினர் பொறுமையாக உள்ளனர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடக்க தி.ு.க சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று உறுதி கூறுகிறோம். தி.ு.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், தேர்தல் ஆணைய‌த்து‌க்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதற்காகவும் பொறுமையுடன் இருக்கிறோம்.

எனவே, தேர்தல் ஆணையம் அ.ி.ு.க.வினரின் சட்ட விரோத நடவடிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இ‌ந்புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, ''அனைத்தும் முறைப்படி விசாரிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil