பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் அஞ்சல் துறை ஒரு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.
பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும், அஞ்சல் துறையும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அதன்படி, நாட்டில் எங்கிருந்தும் அஞ்சல் மூலம் இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக ரூ.210-ஐ மணியார்டர் மூலம் "நிர்வாக அதிகாரி, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சபரிமலை பத்தினம்திட்டா மாவட்டம், கேரளா-689 713" என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் ஐயப்பன் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
இந்தத் தொகை சாதாரண அல்லது "ஸ்பீடு போஸ்ட் மணியார்டர்" மூலமே அனுப்பப்பட வேண்டும். இந்த பிரசாதத்தில் அரவண டின், அப்பம், ஐயப்பன் படம், விபூதி, சந்தனம் ஆகியவை இருக்கும்.
மண்டல பூஜை, மகரவிளக்கு மற்றும் விஷு திருவிழாக்களின் போது சபரிமலைக்கு வரஇயலாத பக்தர்களுக்கு இந்த ஏற்பாடு பயனுள்ளதாக இருக்கும்.