மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் "கிரீமி லேயரை'' நீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கி.வீரமணி தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் மெமோரியல் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.