திருமங்கலம் தி.மு.க வேட்பாளர் லதா அதியமான் வரும் திங்கட்கிழமை (22ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்வார் என மதுரை மாவட்ட தி.மு.க செயலர் மூர்த்தி தெரிவித்தார்.
திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமங்கலம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் லதா அதியமான் அறிமுகம் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு திருமங்கலத்திலுள்ள வி.எஸ்.ஆர் கல்யாண மகாலில் மு.க.அழகிரி தலைமையில் நடக்கிறது.
இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். வரும் 22ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு வேட்பாளர் லதா அதியமான் திருமங்கலம் தேவர் சிலையிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்வார். உடனே பிரசாரமும் துவங்கும் என்று மூர்த்தி கூறினார்.