Publish Date: Mon, 15 Dec 2008 (15:28 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (15:23 IST)
திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை இந்திய தேசிய லீக் ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் மாநில செயலர் எம்.அபுதாகீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநிலத் தலைவர் பசீர் அகமது பிரசாரம் செய்ய உள்ளார் என்றும் எனவே மதுரை மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் அ.இ.அ.தி.மு.க. வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.