தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் பற்றிய விவரத்தினை முதலமைச்சர் கருணாநிதியிடம் மத்திய குழுவினர் இன்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்தியக் குழு உறுப்பினர்களான மத்திய உள்துறை இணைச் செயலாளர் கே.எஸ்கந்தன், மத்திய நிதித்துறை துணை இயக்குனர் தீனாநாத், மத்திய குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் ஆலோசகர் ஆர்.எம்.தேஷ்பாண்டே, மத்திய திட்டக்குழுவின் முதுநிலை ஆலோசகர் முரளிதரன், மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குனர் பி.மனோஜ்குமார், மத்திய புகையிலை வாரியத்தின் இயக்குனர் மனோகரன், மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்தின் செயல் இயக்குனர் சுப்பிரமணியம், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறையின் கண்காணிப்பு பொறியாளர் எம்.ஜி.ஜெயச்சந்திரன், மத்திய கால்நடைத்துறை அலுவலர் ராஜீவ் கோஸ்வா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை இன்று சந்தித்து தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் பற்றிய விவரத்தினை தெரிவித்தார்கள்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உ.மதிவாணன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் கே.தீனபந்து, வருவாய் நிர்வாக ஆணையர் என்.சுந்தரதேவன், நில வருவாய் இணை ஆணையர் என்.ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.