Newsworld News Tnnews 0812 06 1081206014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் நாளை வரை நடைமேடை ‌அனுமத‌ி சீ‌ட் ‌கிடையாது!

Advertiesment
சென்ட்ரல்
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு வரு‌ம் 7ம் தேதி வரை (நாளை) செ‌ன்‌ட்ர‌ல், எழு‌ம்பூ‌ர் ரயில் நிலையங்களி‌ல் நடைமேடை ‌அனும‌தி சீ‌ட்டு (பிளாட்பார்ம் டிக்கெட்டு) வழங்கப்படமாட்டாது எ‌ன்று தெற்கு ரயில்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக வெ‌ளி‌யி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைங்களுக்கு வரும் பயணிகள், தாங்கள் பயணம் செய்ய உள்ள ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும்.

அவர்களின் உடைமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, 7ஆம் தேதி வரை 2 ரயில் நிலையங்களிலும் நடைமேடை அனும‌தி ‌சீ‌‌ட்டுக‌ள் வழங்கப்படமாட்டாது.

வயதானவர்கள், இயலாதோர்களுடன் வரும் நபர்களுக்கான நடைமேடை அனும‌தி ‌சீ‌‌ட்டுக‌ள் பெற தலைமை பதிவு மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ள வேண்டும். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள பி.ஆர்.எஸ் கவுன்ட்டர்களில் முன்பதிவு ‌சீ‌ட்டுக‌ள் வழங்கப்படும் எ‌ன்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil