Newsworld News Tnnews 0812 02 1081202053_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருந்ததிய‌ர் சமூக‌த்தை ஏமாற்றுகிறார் ஜெயல‌லிதா : கருணாநிதி

Advertiesment
அருந்ததியர் ஜெயலலிதா கருணாநிதி இட ஒதுக்கீடு அனைத்துக்கட்சி கூட்டம்
, செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:25 IST)
ஓரம் ஒதுக்கப்பட்டுக்கிடக்கும் ஒரு பெரும் சமுதாயத்தைக் கைதூக்கிவிட ‌நினை‌க்கு‌ம் எ‌ன்னை‌ப் பா‌‌‌ர்‌த்து அருந்ததி சமுதாயத்தை ஏமாற்றுகிறேன் என்று கூறு‌ம் ஜெயல‌லிதா, அந்தப் பரிதாபத்திற்குரிய சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறாரே எ‌ன்று கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தான் எதிர்க்கட்சிக்குரிய இலக்கணமா? ஆளுங்கட்சியை வழிநடத்தும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இதுதான் எடுத்துக்காட்டா? எ‌ன்று‌ம் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "அருந்ததி'' என்பது ஆதிகாலத்திலிருந்து நமது நாட்டில் பழைமையாகக் குறிப்பிடப்படுகிற ஓர் நட்சத்திரம், புராணிகர்கள் அருந்ததியைக் கற்புக்கரசி என்றும் வசிஷ்ட முனிவரின் வாழ்க்கைத் துணைவியென்றும் குறிப்பிட்டு, அவளது உயர்வை உணர்த்தும் வண்ணம் வானத்தில் ஒரு நட்சத்திரமாக வைத்துக் கொண்டாடுகிற பழக்கம் கொண்டவராயிருந்தனர்.

இன்றைக்கும் அதே நம்பிக்கையுடன், திருமணங்களில் கூட "அம்மி மிதித்து அருந்ததி பார்த்து'' என்ற பழமொழியைப் பயன்படுத்துகிற மக்களை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு தெய்வீகப் பெண் என்று "அருந்ததி'' புகழப்பட்டாலும் கூட அப்பெயர் கொண்ட ஒரு சமுதாயத்தினர் இந்த நாட்டில் எவ்வளவு இழிவுடன் நடத்தப்படுகிறார்கள், எவ்வளவு கேவலமான வாழ்க்கை அவர்களின் தலையெழுத்து என ஆக்கப்பட்டுள்ளது.

அந்தோ; கொடுமையினும் கொடுமை மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை அந்த "அருந்ததி'' சமுதாயத்தின் கட்டாயச் சேவைகளில் ஒன்றாக்கப்பட்டு விட்டதாகும். இழிவு நிறைந்த அந்தக் கொடுமை அகற்றப்பட வேண்டுமேயென்று நான் திடமாக முடிவெடுத்துத்தான்; அருந்ததி மக்களுக்கு இட ஒதுக்‌கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் சட்டப்பிரச்சனைகள் எப்படியிருக்கின்றன என்பதை அறிந்து ஆய்வு செய்திட, ஒரு சட்ட வல்லுநரை நியமிக்க முடிவெடுத்து, அதுபற்றி முதலில் விவாதித்திட தமிழக அரசின் சார்பில் ஓர் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை 12.3.2008 அன்றையதினம் அரசு தலைமைச் செயலகத்தில் கூட்டினேன்.

அந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அழைக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில் ஜெயக்குமாரும், எஸ்.அன்பழகனும் கலந்து கொண்டு, விவாதத்திலும் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் நீண்ட நேரக் கலந்துரையாடலுக்குப் பிறகு, பின்வரும் முடிவு எடுக்கப்பட்டது.

"சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் அடித்தளத்திலே உள்ள ஆதி திராவிட மக்களுக்குள்ளேயே அருந்ததியர் எனப்படுவோர் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருப்பதால், அவர்களைக் கைதூக்கிவிடும் முயற்சிகளில் ஒன்றாக, தற்போது ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கிடவும், அருந்ததியர் எனப்படுவோருள் எந்தெந்தப் பிரிவினரை உள்ளடக்குவதென்றும், அந்த மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவைப் பற்றியும் விரிவான முறையில் விசாரித்தறிந்து அண்மையில் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அமைந்துள்ள கமிஷனின் நிலையையும் ஆராய்ந்து, தேவைப்பட்டால் அவர்களையும் கலந்து கொண்டு, அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிப‌தியை கொண்ட ஒரு நபர் குழு அமைப்பதென்றும், அந்தக் குழுவின் அறிக்கையை ஆறு மாத காலத்திற்குள் பெற்று அதை நடைமுறைப் படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்பதென்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.''

இந்த முடிவுக்கேற்ப, அருந்ததி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டில் மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதெனவும், அதனை நடைமுறைப்படுத்த நீதிப‌தி எம்.எஸ்.ஜனார்த்தனத்தை கொண்ட ஒரு நபர் குழுவை அமைப்ப தெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏதாவது திருத்தம் சொல்ல வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நினைத்திருந்தால், அந்தத் திருத்தத்தை எழுதி அனுப்பி அல்லது ஒரு நபர் குழுவிற்கு தங்கள் கட்சியின் கருத்தினை அனுப்பி அந்தத் தீர்மானத்துக்கு வலிமை சேர்த்திருக்கலாம். ஆனால் அம்மையார் (அ.தி.மு.க.) உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்களேயிருந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எதிராக, எவ்வளவு துடுக்கான வார்த்தைகளை என் மீது தொடுத்திருக்கிறார் பார்த்தாயா?

"2006ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசிடம் போராடி பெற்றுக் கொடுத்திருக்கலாம் அல்லவா? எனவே இது அரசியல் மோசடி'' என்று ஜெயலலிதா அறிக்கையிலே கேட்டிருக்கிறார். 1991 முதல் 1996 வரையிலும், 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் ஜெயலலிதா தானே முதலமைச்சர், அப்போது ஏன் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீட்டினை வழங்கிட ஒரு குழுவினை ஜெயலலிதா அமைக்கவில்லை? இப்போது நான் செய்த பணியினைக் கூட தான் செய்யாமல் இருந்து விட்டு இப்போது நாம் செய்கின்ற பணிக்கு ஜெயலலிதா குந்தகம் கூறினால், அதனை நம்புவதற்கு அருந்ததிய சமுதாயம் தயாராக இல்லை.

இன்னும் சொல்லப் போனால் 23-1-2008 அன்றே கழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட ஆளுநர் உரையின் பாரா 54லும், 20.3.2008 அன்று படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் பாரா 128லும் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம் எனபதைப்படித்தாலே, அருந்ததிய சமுதாயத்திடம் தி.மு.க.விற்கு எந்த அளவிற்கு உண்மையான பற்று உள்ளது என்பதைப்புரிந்து கொள்ள முடியும்.

ஓரம் ஒதுக்கப்பட்டுக்கிடக்கும் ஒரு பெரும் சமுதாயத்தைக் கைதூக்கிவிடவும், நீயும் மனிதன்தான் மண்ணன்று என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சபதம் செய்து கொண்டு பாடுபடுகிற ஓர் ஆட்சியின் தலைமைத் தொண்டனாக ஓடியாடிப்பணியாற்றும் என்னைப்பார்த்து, "நான், அருந்ததி சமுதாயத்தை ஏமாற்றுகிறேன்'' என்று அந்தப் பரிதாபத்திற்குரிய சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறாரே ஜெயலலிதா, இது தான் எதிர்க்கட்சிக்குரிய இலக்கணமா? ஆளுங்கட்சியை வழிநடத்தும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இதுதான் எடுத்துக்காட்டா?

பழைய புராணப்படி, ஆகாயத்தில் "அருந்ததி நட்சத்திரம்'' இருப்பது உண்மையானால், அது ஜெயலலிதாவைப் பார்த்து கண்சிமிட்டிக் கேட்கும், "அம்மாடியோவ்! அருந்ததி பேரைச் சொல்லி கருணாநிதி அந்தச் சமுதாயத்தை ஏமாற்றுகிறார் நம்பாதீர்!'' என்று நேற்றுத் தான் சொன்னீர்! இன்றைக்கு என்னமோ, "நானே நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அந்த அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை சட்ட மாக்குகிறேன்'' என்கிறீர்- ஓகோ; அருந்ததிய மக்களை ஜெயலலிதாதான் ஏமாற்ற வேண்டும் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறீரா? காதில் விழுகிறதா அம்மா; அதோ அந்தப்பாடல்; கேட்கிறதா? "எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil