சென்னை எழும்பூர் - சேலம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த அதி விரைவு ரயில் (எண் 2297/2298) நாளை முதல் சாதாரண விரைவு ரயிலாக தரம் குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை எழும்பூர் - சேலம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த அதி விரைவு ரயில் (எண் 2297/2298), சாதாரண விரைவு ரயிலாக டிசம்பர் 2ஆம் தேதி முதல் தரம் குறைக்கப்படுகிறது.
இதனால், இந்த ரயில்களின் எண்களும் மாற்றப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில் எண் 1063 என்றும், சேலத்தில் இருந்து சென்னை வரும் ரயில் எண் 1064 என்றும் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த விரைவு ரயிலுக்கு முன்பதிவு செய்பவர்கள், செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பத்தில் அறிவிக்கப்பட்ட புதிய எண்ணை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.