Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடவு‌ச்‌சீ‌ட்டு பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: மதுரை அதிகாரி எச்சரிக்கை!

கடவு‌ச்‌சீ‌ட்டு பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: மதுரை அதிகாரி எச்சரிக்கை!
, திங்கள், 1 டிசம்பர் 2008 (17:33 IST)
உடனுக்குடன் கடவு‌ச்‌சீ‌ட்டு (பாஸ்போர்ட்) பெற்றுத் தருவதாக கூறு‌ம், இடை‌த்தரக‌ர்களை ந‌ம்‌பி பொதும‌க்க‌ள் ஏமாறவே‌ண்டா‌ம் எ‌ன்று மதுரை கடவு‌ச்‌சீ‌ட்டு அ‌திகா‌ரி ஜோஸ் கே. மாத்யூ எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் கூறுகை‌யி‌ல், "படிக்காத ஏழை விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான பணத்தைப் பறித்து கொண்டு இடைத்தரகர்கள் ஏமாற்றுவதாகத் தெரிய வந்துள்ளது. மதுரை கடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலகத்தின் முன்புள்ள சாலையில் உள்ள இடைத்தரர்களும், முகவர்களும் விண்ணப்பபடிவங்களை நிரப்புவதற்காக மட்டுமே ஏகப்பட்ட பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், தேவைப்படாத ஆவணங்களையும், பொய்யான சான்றுகளை இணைக்கவும் இவர்கள் விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகின்றனர்.

கடவு‌ச்‌சீ‌ட்டபெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்கும்போது, முந்தைய கடவு‌ச்‌சீ‌ட்டி‌ன் விவரங்களையும், விண்ணப்பதாரர்கள் பற்றிய சில விவரங்களையும் மறைத்துவிடச் சொல்லியும் இந்த இடைத்தரகர்கள் கூறுவதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற முக்கிய தகவல்களை மறைத்தால், கடவு‌ச்‌சீ‌ட்டபெறுவதில் தாமதம் ஏற்படுவதோடு, கடவு‌ச்‌சீ‌ட்டவிதிகளின் கீழ் அபராதம் விதிக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நேரிடும். எனவே, பொதுமக்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் தம்மை அணுகும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

கடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டவும், உதவுவதற்காகவும் அந்த வளாகத்தின் உள்ளேயே ஓய்வு பெற்ற ராணுவத்தினர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் உதவியுடன் ஆன்லைனில் கடவு‌ச்‌சீ‌ட்டவிண்ணப்பங்களை அளிக்க முடியும். தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள், நகல் எடுக்கும் வசதி ஆகிய அனைத்தும் இந்த மையங்களில் கிடைக்கும். இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் உதவி மையத்தை பயன்படுத்தி‌க் கொ‌ள்ளலா‌‌ம்.

கடவு‌ச்‌சீ‌ட்டவிண்ணப்பங்களை அளிப்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் www.passport.gov.in , www.passport.nic.in ஆகிய இணையதளங்களில் இரு‌ந்து ப‌ெ‌ற்று‌க் கொ‌ள்ளலாம‌்" எ‌ன்று ஜோஸ் கே. மாத்யூ தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil