Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பய‌ங்கரவா‌திகள் தாக்குதலில் பலியானவ‌ர் குடும்பத்துக்கு ‌நி‌தி : கருணாநிதி உத்தரவு

Advertiesment
பய‌ங்கரவா‌திகள் தாக்குதலில் பலியானவ‌ர் குடும்பத்துக்கு ‌நி‌தி : கருணாநிதி உத்தரவு
, திங்கள், 1 டிசம்பர் 2008 (13:22 IST)
மு‌‌ம்பை‌யி‌ல் பய‌ங்கரவா‌‌திக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ப‌லியானவ‌‌ர் குடு‌‌‌ம்ப‌த்து‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் ரூபா‌‌ய் ‌‌நி‌தியுத‌வி வழ‌‌‌ங்‌‌கி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

மும்பை தாஜ் ஓட்டலில் வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த ரகமத்துல்லா என்பவர் 25 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தவர். கடந்த 26ஆ‌ம் தேதி அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகி அவரது உடல் ஆம்பூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி மறைந்த ரகமத்துல்லாவின் குடுமபத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் ரகமத்துல்லாவின் குடும்பத்திற்கு வழங்கி இன்று ஆணை பிறப்பித்துள்ளார். இ‌ந்த ‌நி‌தி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக வழங்கப்படும் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil