Publish Date: Sat, 29 Nov 2008 (23:38 IST)
Updated Date: Sat, 29 Nov 2008 (23:37 IST)
அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,000 நிதியுதவியுடன் 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் பெருமழை காரணமாக பகுதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, தலா ரூ.2 ஆயிரம் வீதம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அவ்வாறு நிதி உதவி பெறுவோருக்கு 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்க முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.