Newsworld News Tnnews 0811 22 1081122002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் - வானிலை!

Advertiesment
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாடு வங்கக் கடல்
, சனி, 22 நவம்பர் 2008 (00:35 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தென் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழையும், அதிராமபட்டிணம், ராமேஸ்வரம், அம்பாசமுத்திரம், அருப்புக்கோட்டையில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil