Publish Date: Fri, 21 Nov 2008 (13:40 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (13:40 IST)
கரும்புக்கு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி ஈரோடில் விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிரே அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், ஈரோடு பாசன விவசாயிகள் சங்கம், அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் உண்ணாவிரதத்தையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.