ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்து கார்நாடக பா.ஜ.க. சார்பில் ஒகேனக்கல்லில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் மறுகொட்டாய் பகுதியில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான தெங்கிமாதேவு தலைமையில் அக்கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இப்போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதையடுத்து, அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் இருமாநில காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பிரச்சனையில் கர்நாடக பா.ஜ.க. மீண்டும் போராட்ட அறிவிப்பை கையில் எடுத்துள்ளதால் ஒகேனக்கல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. கர்நாடக பா.ஜ.க.வினரின் இந்த திடீர் போராட்ட அறிவிப்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.