Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாடி மேம்பாலப் பணி டிசம்ப‌ரி‌ல் முடிவடையும் : டி.ஆர். பாலு!

சென்னை பாடி மேம்பாலப் பணி டிசம்ப‌ரி‌ல் முடிவடையும் : டி.ஆர். பாலு!
, ஞாயிறு, 2 நவம்பர் 2008 (13:53 IST)
சென்னை பாடி சந்திப்பில் க‌ட்ட‌ப்ப‌ட்டு வரு‌ம் மே‌‌ம்பாலப் பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூ‌றியு‌ள்ளா‌ர்!

சென்னையில் நடைபெற்று மேம்பாலப் பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் டி.ஆர். பாலு இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

மதுரவாயல், கோயம்பேடு ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பாலப் பணிகள் சற்று தாமதமாக நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாமதத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதன் அடிப்படையில் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எண்ணூர்-மணலி வரையிலான 29 கி.ீ. நான்கு வழிப்பாதை அமைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் ரூ.537 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சென்னை ஏற்றுமதி மண்டலத்தை இணைக்கும் 2 கி.ீ. நீளமுள்ள புறவழிச்சாலையும் அடங்கும்.

போர் நினைவுச் சின்னம் முதல் மதுரவாயல் வரையிலான ரூ.1560 கோடி செலவில் 18.3 கிமீ சாலைத் திட்டத்திற்கான முதல்கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதில் 25 நிறுவனங்களை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் அவர்களது முன் அனுபவம், திறமை, முதலீட்டு தகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து வசதிக்காக வழிகாட்டி பலகைகள் அனைத்து இடங்களிலும் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சாலை விதிகளை சரியாக பின்பற்றினால் எந்தவித விபத்தும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து சாலைப் பணிகளும் வெகு விரைவாக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. சென்னை-திண்டிவனம் நான்கு வழிப்பாதை, திண்டிவனம் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில் திண்டிவனம்-திருச்சி சாலைப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கொள்ளிட மேம்பாலப் பணி டிசம்பர் மாதத்தில் முடிவடைந்து விடும்.

ரயில்வே பாலங்கள் அமைப்பதில் இருந்த தாமதங்கள் முடிவடைந்து அதற்கான அனுமதிகள் கிடைத்துள்ள நிலையில் அந்தந்த பணிகளும் விரைந்து முடிக்கப்படும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்று அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர். பாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil