Publish Date: Sun, 02 Nov 2008 (00:08 IST)
Updated Date: Sun, 02 Nov 2008 (00:08 IST)
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் வரும் 5 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சம்மேளனத்தின் தலைவர் விஜயன், பொதுச் செயலர் உமாசங்கர் பாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள செந்தில் ஸ்டுடியோ அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் உண்ணாவிரதத்தில் சம்மேளனத்தை சார்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் உள்ளூர் திரைப்பட, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதலோடு நடைபெறாது என்றும் கூறியுள்ளனர்.