அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
குறிப்பாக ஆந்திராவின் தெற்கு கரையோரப் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கேரளா, ராயலசீமா, லட்சத் தீவுகளில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், விட்டு விட்டு மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 16 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ. மழையும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.