Publish Date: Tue, 21 Oct 2008 (13:52 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (13:51 IST)
ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள நளினி, தன்னை விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
''ராஜீவ்காந்தி கொலை வழக்குக்காக என்னிடம் மத்திய புலனாய்வு கழகம் (சி.பி.ஐ.) விசாரணை நடத்தியது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது என்றும் அரசு சொல்லும் இந்த காரணம் ஏற்க கூடியதாக இல்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள நளினி, எனவே என்னை விடுவிக்க மறுப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் எனக்கு அரசு பொது மன்னிப்பு வழங்குவதோடு என்னை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் வர உள்ளது.