Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ரப்பர் கழக தொழிலாளர்களு‌க்கு ஊதியம் உயர்வு: கருணாநிதி உ‌த்தரவு!

அரசு ரப்பர் கழக தொழிலாளர்களு‌க்கு ஊதியம் உயர்வு: கருணாநிதி உ‌த்தரவு!
, செவ்வாய், 21 அக்டோபர் 2008 (13:20 IST)
அரசு ர‌ப்ப‌ர் கழக தொ‌ழிலாள‌ர்களு‌க்கு ஊ‌திய‌த்தை உய‌ர்‌த்த‌ி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் மற்றும் இதர படிகளை, 1.12.2007 முதல் முன்தேதியிட்டு உயர்த்தி வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

திருத்தி அமைக்கப்பட உள்ள ஊதியத்தின்படி இன்றைய தேதியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களில் பால் வடிப்பாளர்கள் நாளொன்றுக்கு ரூ.104.65 அடிப்படை ஊதியமும், ரூ.37.05 அகவிலைப்படியும் ஆக மொத்தம் ரூ.141.70 ஊதியமாகப் பெறுவர்.

அதே போன்று களப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ரூ.95 அடிப்படை ஊதியமும் ரூ.37.05 அகவிலைப்படியும் ஆக மொத்தம் ரூ.132.05ம், தொழிற்கூடத் தொழிலாளர்கள் ரூ.100 அடிப்படை ஊதியமும், ரூ.37.05 அகவிலைப்படியும் ஆக மொத்தம் ரூ.137.05 ஊதியமாகப் பெறுவார்கள்.

இதன்படி மேற்கண்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் நாளொன்றுக்கு குறைந்த பட்ச ஊதிய உயர்வாக ரூ.18.65-ம் அதிகபட்ச ஊதிய உயர்வாக ரூ.21.30-ம் கிடைக்கும். மேலும் பண்டிகை முன்பணம் ரூ.1,500-லிருந்து ரூ.3,000 என உயர்த்தி வழங்கவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil