84வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு, முதலமைச்சர் கருணாநிதி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சார்பில் அவரது மகனும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பர்னாலாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.